Breaking News

எஸ்.ஐ.ஆர் பணிகளை புறக்கணிப்பு வருவாய்த்துறை சங்கம் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

நாளை முதல் எஸ்.ஐ.ஆர் பணிகளை புறக்கணிக்க வருவாய்த்துறை சங்கம் முடிவு



வாக்காளர் தீவிர பட்டியல் சீர்திருத்தம் பணிகள் நவம்பர் 4 ம் தேதி முதல்  நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், தமிழ்நாட்டில் நாளை முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை புறக்கணிக்க வருவாய்த்துறை சங்கம் முடிவு செய்துள்ளது.

அதீத பணி நெருக்கடிகளை களைந்திட வலியுறுத்தி நாளை எஸ்.ஐ.ஆர். பணிகள் புறக்கணிக்கப்படுகிறது. 

இது தொடர்பாக வருவாய் துறை கூட்டமைப்பு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் முக்கிய கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதில் எஸ்ஐஆர் திருத்தப்பணிகள் உரிய திட்டமிடல் என்றும் பயிற்சிகள் அளிக்காமலும் கூடுதல் பணியிடங்கள் மற்றும் நிதி வழங்காமல் அவசர கதியில் மேற்கொள்வதற்கு நிர்பந்தம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது அனைத்து நிலை வருவாய் ஊழியர்களுக்கும் கடுமையான பணி நெருக்கடிகள் மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையும் கலைந்திட வலியுறுத்தி நாளை முதல் எஸ்ஐஆர் புறக்கணிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் அந்த வருவாய்த்துறை சங்கத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் கிராம உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், நில அளவையர் அலுவலக உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரையில் அனைத்து நிலை வருவாய் துறை அலுவலர்களும் முழுமையாக ஈடுபடுவார்கள் என்றும் தமிழ்நாடு வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று (நவம்பர் 17) மாலை, மாவட்ட ஆட்சியர்களிடம் பெருந்திரள் முறையீடு செய்து, மாவட்ட மற்றும் வட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் சங்கம் திட்டமிட்டுள்ளது. இதனை தமிழக தலைமைத் தேர்தல் அலுவலர் மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையம் தலையிட்டு, சுமூகமான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ' சார்பில் தமிழகம் முழுவதும் நாளை அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடத்த உள்ளனர். 

இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு சங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். 

இந்நிலையில், நாளை பணிக்கு வராமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என்று தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். 

இது தொடர்பாக அனைத்துறை செயலாளர்களுக்கும் அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், நோ ஓர் நோ பே என்ற அடிப்படையில், நாளை பணிக்கு வராத ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது என்று, மருத்துவ விடுப்பை தவிர சாதாரண விடுப்போ, மற்ற விடுப்போ அரசு ஊழியர்கள் எடுக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், காலை 10.15 மணிக்குள் பணிக்கு வராதவர்கள் விவரங்களை சேகரிக்கவும், அவற்றை மனித வள மேலாண்மை துறைக்கு அனுப்பவும் உத்தரவிட்டுள்ளார்..

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback