Breaking News

தமிழ்நாடு அரசின் இலவச லேப்டாப் பெற விண்ணப்பிக்கவும் என வலம் வரும் லின்ங்கை கிளிக் செய்யாதீர்கள் -Beware of Scam Alert free laptop spam link

அட்மின் மீடியா
0
தமிழ்நாடு அரசின் இலவச லேப்டாப் பெற விண்ணப்பிக்கவும் என வலம் வரும் வாட்ஸ் அப் லின்ங்கை கிளிக் செய்யாதீர்கள் -Beware of Scam Alert  free laptop spam link


கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் தமிழ்நாடு இலவச லேப்டாப் திட்டத்தில் சேர விண்ணப்பிக்கவும் என்று ஒர் போலி செய்தி 
 வலம் வருகின்றது

அதனை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள்

அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன?

உண்மை என்ன:-

அது போல் ஓர் செய்தியை தமிழக அரசு  அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை 
தமிழ்நாடு அரசு இலவச லேப்டாப் திட்டத்தில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம் என்று சமூக வலைத்தளங்களிலும், சில இணையதளங்களிலும் ஒரு போலிச் செய்தி அதிவேகமாகப் பரவி வருகிறது. 

இத்திட்டம் தொடர்பான எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அரசின் தரப்பில் வெளியாகாத நிலையில், இந்தச் செய்தி உண்மையற்றது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். 

மேலும் அந்த லிங்க்கும் அந்த இணையதளமும் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ தளம் இல்லை என்று தெரிந்து கொள்ளுங்கள் 

இதுபோன்ற தவறான தகவல்களை நம்பி யாரும் தங்களது தனிப்பட்ட விவரங்களைப் பகிர வேண்டாம் என்றும், அரசின் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்பி செயல்படுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் அந்த லிங்கில்  சென்றால்  நீங்க 5 வாட்ஸ் குரூப்புக்கு ஷேர் பண்ணுங்க என வரும் நீங்களும் நம்பி அனுப்புங்க திரும்ப அந்த லின்ங்கில் போனாலும் மீண்டும் அதே போல் தான் ஒன்றும் இருக்காது 

நீங்கள் ஷேர் செய்து விட்டு போயிடுவீங்க நீங்கள் ஷேர் பண்ண அந்த வதந்தியை அவர்கள் அடுத்தவர்களுக்கு ஷேர் செய்வார்கள் இப்படியேதான் வதந்திகள் பரவிக் கொண்டே வருகிறது.

இது போன்ற பொய்யான செய்திகளால்  உங்கள் தகவல் திருடப்படலாம் என்பது  ஆதாரபூர்வமான உண்மை எனவே பொய்யான செய்தியை ஷேர் செய்யாதீர்கள் என வேண்டி கேட்டு கொள்கின்றோம்

வாட்ஸ் அப் மோசடிகளில் இருந்து தப்பிப்பது எப்படி?

தெரியாத நபர் அல்லது எண்ணிலிருந்து பெறப்படும் இணைப்புகளை (லிங்க்) எந்த சூழ்நிலையிலும் கிளிக் செய்யக் கூடாது.

தெரியாத நம்பரிலிருந்து இருந்து வாட்ஸ்அப் மெசேஜ் வந்தால் ரிப்ளை செய்யாதிர்கள். 

பணப் பலன்களைக் கோரும் இணைப்புகள் அல்லது செய்திகளைக் கிளிக் செய்ய வேண்டாம். இத்தகைய செய்திகள் பெரும்பாலும் மோசடி செய்பவர்களால் தான் அனுப்பப்படுகின்றன.மேலும் பணப் பலன்களைக் கோரும் இணைப்புகள் அல்லது செய்திகளை மற்றவர்களுடன் பகிர வேண்டாம்.

பொதுவாக பேங்க் டெலிவரி சேவைகள் மற்றும் அரசு நிறுவனங்கள் என்ற பெயரில் தெரியாத நம்பரில் இருந்து மெசேஜ்களை அனுப்பினால் எதையும் கிளிக் செய்யாமல் அப்படியே டிலைட் செய்துவிடுங்கள்

தெரியாத நம்பரிலிருந்து வரும் மெசேஜை கிளிக் செய்ய வேண்டாம். இந்த லிங்களின் உதவியுடன், மேல்வேர் அல்லது வைரஸ்கள் போனில் டவுன்லோட் செய்யப்படுகின்றன

அதேபோல் வாட்ஸ் அப் வழியாக தெரியாத எண்களில் இருந்து ஏதேனும் அழைப்புகள் வரும் பட்சத்தில் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். தெரியாத எண்களில் இருந்து அழைப்புகளை மேற்கொண்டு அப்பாவி மக்களை ஏமாற்றி வருகின்றனர். எனவே எச்சரிக்கையாக இருக்கவும்.

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback