Breaking News

டிசம்பர் 4 ம் தேதிக்குள் எஸ்.ஐ.ஆர். படிவங்களை சமர்ப்பிக்காவிட்டால் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாது - அர்ச்சனா பட்நாயக்

அட்மின் மீடியா
0

டிசம்பர் 4 ம் தேதிக்குள் எஸ்.ஐ.ஆர். படிவங்களை சமர்ப்பிக்காவிட்டால் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாது - அர்ச்சனா பட்நாயக்

3 முறை வீட்டுக்கு வந்தும் படிவம் வழங்க முடியாதவர்களின் பெயர் இடம்பெறாது

வாக்காளர்கள் உரிமை கோரலுக்கு டிச.9 - ஜன.8 வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணியில் தரப்பட்ட படிவங்களை பூர்த்தி செய்தி திருப்பி தராவிட்டால் வரும் டிசம்பர் 9ல் வெளியிடப்படும் வரைவுப்பட்டியலில் பெயர் இருக்காது.

மேலும் 2002/2005 வாக்காளர் பட்டியலில் தனது பெயரோ அல்லது உறவினரின் பெயரோ கண்டறிய முடியாதவர்கள், பிற விவரங்களை மட்டும் நிரப்பி SIR படிவத்தை ஒப்படைத்தாலும் அவர்களின் பெயர், வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் படிவம் தந்தால் தான் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறும். என தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்ப

இத்தகைய சந்தர்ப்பங்களில் வாக்காளர்கள் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள 13 ஆவணங்களை ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க நோட்டீஸ் அனுப்பப்படும்.

ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் மூன்று முறை வீட்டுக்கு வந்தும் கணக்கெடுப்பு படிவங்களை விநியோகிக்க முடியாத பட்சத்தில் அவ்வாக்காளர்கள் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாது.

டிசம்பரில் வெளியாகும் வரைவு பட்டியலில் பெயர் இடம் பெறாவிட்டால் உரிமை கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் காலத்தில் படிவம் 6, படிவம் 8 மற்றும் உறுதிமொழிப்படிவம் ஆகியவற்றை தந்து பெயரை புதிதாக சேர்க்கலாம். 

இச்சந்தர்ப்பங்களில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள 13 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை இணைக்கலாம்.அதற்கான அறிவிப்பு தரப்படும்.



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback