சவூதி உம்ரா பயணத்தில் 45 பேர் உயிரிழந்த நிலையில் 1 வர் உயிர் தப்பியது எப்படி One pilgrim, the sole survivor of the terrible Madina bus crash
சவூதி உம்ரா பயணத்தில் 45 பேர் உயிரிழந்த நிலையில் 1 வர் உயிர் தப்பியது எப்படி One pilgrim, the sole survivor of the terrible Madina bus crash
சவுதி அரேபியாவில் மக்காவிலிருந்து மதீனாவுக்கு பயணம் செய்த உம்ரா பேருந்து டீசல் டேங்கர் லாரியுடன் மோதி தீப்பிடித்ததில் 42 இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேந்ர்த யாத்ரீகர்கள் உயிரிழந்தனர். பேருந்தில் மொத்தம் 43 பேர் இருந்த நிலையில், 20 பெண்கள் மற்றும் 11 பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் உட்பட 45 பேர் தீயில் சிக்கி உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சவுதி நேரப்படி இரவு 11 மணியளவில் (இந்திய நேரப்படி அதிகாலை 1.30 மணி), பத்ருக்கும் மதீனாவுக்கும் இடையே உள்ள முஃபாரஹத் பகுதியில் இந்த பேரழிவு நேர்ந்தது. மக்காவில் புனித யாத்திரை முடித்துவிட்டு யாத்ரீகர்கள் மதீனாவுக்கு செல்லும் வழியில் இந்த விபத்து ஏற்பட்டது.
உயிர் தப்பியது எப்படி:-
விபத்தில் உயிர் பிழைத்த 25 வயது அப்துல் ஷுஐப் முகமது காயமடைந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஒட்டுநருக்கு அருகில் உள்ள சீட்டில் அமர்ந்து பயணித்த முகமது அப்துல் சோயிப் பேருந்து டீசல் லாரி மீது மோதிய போது ஜன்னல் வழியாக வெளியே வந்து முகமது அப்துல் சோயிப் என்பவர் மட்டும் உயிர் பிழைத்துள்ளார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த ஷோயப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், இருப்பினும் அவரது நிலை தெரியவில்லை.
Tags: மார்க்க செய்திகள் வெளிநாட்டு செய்திகள்

