3 தலைமுறை ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 குழந்தைகள் உள்பட 18 பேர் உம்ரா பேருந்து தீ விபத்தில் பலியான சோகம்
3 தலைமுறை ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 குழந்தைகள் உள்பட 18 பேர் உம்ரா பேருந்து தீ விபத்தில் பலியான சோகம்
சவுதியில் பேருந்து விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 இந்தியர்கள் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதியவர்கள், இளம் வயதினர் 9 பேர், அவர்களின் 9 குழந்தைகள் என 3 தலைமுறையும் தீக்கு இரையாகினர்.
சவுதி அரேபியாவின் மெதினா அருகே நடந்த பேருந்து விபத்தில், 42 இந்தியர்கள் உயிரிழந்தனர். அதில் 9 குழந்தைகள் உட்பட 18 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நசீருதீன் (70), அவரது மனைவி அக்தர் பேகம் (62), மகன் சலாவுதீன் (42), மகள்கள் அமினா (44), ரிஸ்வானா (38), மற்றும் ஷபானா (40) மற்றும் அவர்களது குழந்தைகள் என ஒரே குடும்பத்தௌ சேர்ந்த மொத்தம் 18 பேர் பலியாகி உள்ளார்கள்
ராம்நகரில் உள்ள நசீருதீன் மற்றும் அவரது குடும்பத்தினரின் வீட்டிற்கு சென்ற அவரது சகோதரி, "என் சகோதரனின் முழு குடும்பமும் அழிந்துவிட்டது என்று கதறி அழுதது அங்கிருந்தவர்களை மனமுடைய செய்தது.
Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள் மார்க்க செய்திகள்
