2002/2005 வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் பிற விவரங்களை நிரப்பி SIR படிவத்தை ஒப்படைக்கலாம் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு!
2002/2005 வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் பிற விவரங்களை நிரப்பி SIR படிவத்தை ஒப்படைக்கலாம் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு!
2002/2005 வாக்காளர் பட்டியலில் தனது பெயரோ அல்லது உறவினரின் பெயரோ கண்டறிய முடியாதவர்கள், பிற விவரங்களை நிரப்பி SIR படிவத்தை ஒப்படைக்கலாம் என தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார்.
மேலும் அப்படி ஒப்படைப்போரின் பெயர், வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தெரிந்த விவரங்களை மட்டும் பூர்த்தி செய்து தந்தாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறும்.
அதேபோல் டிசம்பர் 4 ஆம் தேதிக்குள் SIR படிவங்களை சமர்பிக்காவிடில் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாது. 3 முறை வீடு தேடி சென்றும், படிவம் வழங்க முடியாத வாக்காளர்களின் பெயர்களும் பட்டியலில் இடம்பெறாது. என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்