தென்காசியில் கோர விபத்து - 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர்மோதிக் கொண்ட விபத்தில் 6 பேர் பரிதாப உயிரிழப்பு..! 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் Tenkasi bus accident
தென்காசியில் கோர விபத்து - 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர்மோதிக் கொண்ட விபத்தில் 6 பேர் பரிதாப உயிரிழப்பு..! 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் Tenkasi bus accident
தென்காசி, இடைகால் அருகே சற்றுமுன் 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
40 பேர் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் தென்காசி அரசு ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு காவல்துறை விரைந்து விசாரணை நடத்தி வருகிறது.
தென்காசி விபத்தில் பலியான 6 பேரில் மூவரின் உடல் அடையாளம் காணப்பட்டது1. புளியங்குடியை சேர்ந்த வனராஜ் (36) மற்றும் 2.மல்லிகா (55) 3.கடையநல்லூரை சேர்ந்த தேன்மொழி (55) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
தென்காசி கடையநல்லூரில் நேர்ந்த பேருந்து விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் வேதனைக்குள்ளாகியிருக்கிறேன்.உடனடியாக, மாவட்டப் பொறுப்பு அமைச்சரான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனைத் தொடர்புகொண்டு, சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல அறிவுறுத்தியுள்ளேன். விபத்து நேர்ந்த இடத்திலிருந்து பேசிய மாவட்ட கலெக்டரை, அரசு மருத்துவமனைக்குச் சென்று, பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய உயர்தர சிகிச்சையை உறுதிசெய்யுமாறு உத்தரவிட்டுள்ளேன்.
