புதுச்சேரியில் 10ம் வகுப்பு 12ம் வகுப்பு , டிப்ளமோ,எஞ்சினியர் ,டிகிரி படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு விண்ணப்பிப்பது எப்படி Puducherry CGL Recruitment 2026
புதுச்சேரியில் 10, ம்வகுப்பு 12ம் வகுப்பு , டிப்ளமோ,எஞ்சினியர் ,டிகிரி படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு விண்ணப்பிப்பது எப்படி Puducherry CGL Recruitment 2026
புதுச்சேரியில் பல்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான ஒரே கட்டமாக CGL, CHSL மற்றும் CSL என மூன்று தேர்வுகளுக்கு நவம்பர் 18 முதல் விண்ணப்பம் தொடங்கியுள்ளது.
அதன்படி யு.டி.சி., -197, பொருளாதார துறையில் புள்ளியியல் ஆய்வாளர்- 26, கலைப்பண்பாட்டு துறையில் நுாலக தகவல் உதவியாளர் - 25, வேளாண் துறையில் வேளாண் அதிகாரி- 23, தொழில் வணிக துறையில் டெக்னிக்கல் ஆபிசர் 19, வேளாண் துறையில் வேளாண் அதிகாரி (இன்ஜினியரிங்) -5, வேளாண் அதிகாரி (நிலத்தடி நீர் பிரிவு)-5, பொருளாதார துறையில் பீல்டு சூப்ரவைசர்-27, இளநிலை நுாலக உதவியாளர் 26, கேலரி அசிஸ்டென்ட் என, மொத்தம் 327 அரசு பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வழக்கமாக ஒவ்வொரு அரசு பணியிடத்திற்கு தனித்தனியே போட்டி தேர்வு நடத்தப்படும். புதுச்சேரியில் முதல் முறையாக இந்த அரசு பணியிடங்களுக்கு ஒருங்கிணைந்த போட்டி தேர்வுக்கு நடத்தப்பட உள்ளது. இதற்காக புதுச்சேரி பணியாளர் தேர்வு முகமையும் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
காலிபணியிடங்கள் உள்ள துறைகள்:-
Direct recruitment to the post of Agricultural Officer (Hydrogeology), 2025 (CGL-Exam)
Direct recruitment to the post of Agricultural Officer, 2025 (CGL Exam)
Direct recruitment to the post of Agricultural Officer(Engineering), 2025 (CGL Exam)
DIRECT RECRUITMENT TO THE POST OF ARTIST, 2025 (CHSL exam)
Direct recruitment to the post of Field Supervisor, 2025 (CGL Exam)
Direct recruitment to the post of Gallery Assistant, 2025 (CSL Exam)
Direct recruitment to the post of Junior Library Attendant, 2025 (CSL EXAM)
Direct recruitment to the post of Library and Information Assistant, 2025 (CGL Exam)
Direct recruitment to the post of Lower Division Clerk, 2025 (CHSL exam)
Direct recruitment to the post of Statistical Inspector, 2025 (CGL Exam)
Direct recruitment to the post of Technical Officer, 2025 (CGL Exam)
Direct recruitment to the post of Upper Division Clerk, 2025 (CGL Exam)
ENGAGEMENT OF SECTOR EXPERT ON CONTRACT BASIS, 2025
ENGAGEMENT OF TEAM LEADER ON CONTRACT BASIS, 2025
DIRECT RECRUITMENT TO THE POST OF PRIMARY SCHOOL TEACHER - 2025
Direct recruitment to the post of Sub-Inspector of Police, 2025
Recruitment for the post of Police Constable in Police Department-2025,
காலிபணியிடங்கள்:-
புள்ளியியல் ஆய்வாளர், நூலகம் மற்றும் தகவல் உதவியாளர், விவசாய அதிகாரி, தொழில்நுட்ப அதிகாரி, விவசாய அதிகாரி (பொறியியல்), விவசாய அதிகாரி (நீர்வளவியல்), உயர்நிலை எழுத்தர், கள மேற்பார்வையாளர் eன மொத்தம் 327 காலிப்பணியிடங்கள் உள்ளன.
வயது வரம்பு:-
30 வயது முதல் 32 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:-
பொருளாதாரம், புள்ளியியல், கணிதம், வேளாண், தோட்டக்கலை, மெக்கானிக்கல், சிவில், புவியியல் ஆகியவற்றில் பட்டப்படிப்பு முடித்தவர்கள்
மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், தொழிற்சாலை, உற்பத்தி, வேதியியல், எலெக்ட்ரிக்கல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், ஜவுளி ஆகியவற்றில் டிப்ளமோ முடித்தவர்கள்
ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்க கடைசி நாள் :-
14.12.2025
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://recruitment.py.gov.in/
Tags: புதுச்சேரி செய்திகள் வேலைவாய்ப்பு

