Breaking News

கோல்ட்ரிப் உட்பட 3 இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் - உலக சுகாதாரத் துறை எச்சரிக்கை!

அட்மின் மீடியா
0

தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘கோல்ட்ரிஃப்’ என்ற இருமல் மருந்து காரணமாக மத்தியப் பிரதேசத்தில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 




இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மத்திய அரசு மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளன.இருமல் மருந்து சிரப்இந்த மருந்துகளில் டைஎத்திலீன் கிளைகால் எனும் நச்சு பொருள் அதிகமாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் ஸ்ரீசன் பார்மாட்டிகல்ஸ் தயாரித்த ‘கோல்ட்ரிஃப்’, குஜராத்தின் ரெட்னெக்ஸ் பார்மாட்டிகல்ஸ் தயாரித்த ‘ரெஸ்பிஃபிரெஷ் டிஆர்’, மற்றும் ஷேப் பார்மா தயாரித்த ‘ரீ லைஃப்’ ஆகிய மூன்று மருந்துகளும் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், இம்மருந்துகள் ஏதேனும் நாட்டில் விற்பனை செய்யப்பட்டால் உடனடியாக WHO-வுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இம்மாதிரி இருமல் மருந்துகள் பரிந்துரைக்கவோ, வழங்கவோ கூடாது என்றும், 5 வயதுக்குட்பட்டவர்களுக்கும் பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுவதில்லை என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு நிறுவனங்களை ஆய்வு செய்து, மருந்து தயாரிப்பு நிறுவனம் மூடல், உரிமையாளர் கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மேலும், அனைத்து மாநிலங்களும் இருமல் மருந்துகளை பரிந்துரிக்கும் போது அதிக எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

  • தமிழ்நாட்டின் ஸ்ரீசன் பார்மாட்டிகல்ஸ் தயாரித்த ‘கோல்ட்ரிஃப்’, 
  • குஜராத்தின் ரெட்னெக்ஸ் பார்மாட்டிகல்ஸ் தயாரித்த ‘ரெஸ்பிஃபிரெஷ் டிஆர்.
  • ஷேப் பார்மா தயாரித்த ‘ரீ லைஃப்’ 
  • ஆகிய மூன்று மருந்துகளும் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback