பீகார் தேர்தல் அறிக்கை : வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை, பெண்களுக்கு மாதம் 2500 ரூபாய், 200 யூனிட் இலவச மின்சாரம்..!
243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக அடுத்த மாதம் 6 மற்றும் 11-ம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது
பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று இருக்கிறது.
ஆட்சியை தக்க வைத்து கொள்ளும் ஆர்வத்தில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி தீவிர களப்பணியாற்றி வருகிறது.
நிதிஷ் குமாரிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்று எதிர்க்கட்சியான தேஜஸ்வி யாதாவின் ஆர்.ஜே.டி.( ராஷ்ட்ரிய ஜனதா தளம்) காங்கிரசின் மகா பந்தன் கூட்டணி இருக்கிறது.
இந்த நிலையால் இந்தியா கூட்டணி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
1.ஆட்சி அமைந்த 20 நாட்களில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற சட்டம் இயற்றப்படும்.
2. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
3. ஜீவிகா திட்டத்தின் கீழ் பணிபுரியும் அனைத்துச் சமூகப் பணியாளர்களும் நிரந்தரமாக்கப்பட்டு, அரசு ஊழியர் அந்தஸ்து வழங்கப்படும். அவர்களின் மாதச் சம்பளம் ரூ.30,000 ஆக நிர்ணயிக்கப்படும். ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் தற்காலிக ஊழியர்கள் அனைவரும் நிரந்தரமாக்கப்படுவர்
4. ஒவ்வொரு குடும்பத்திற்கும் 200 யூனிட்டுகள் இலவச மின்சாரம்.
5. ஒவ்வொரு தனிநபருக்கும் ரூ.25 லட்சம் வரை இலவச மருத்துவக் காப்பீடு வழங்கப்படும்.
6. மக்கள் தொகைக்கு ஏற்ற வகையில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு வரம்பை அதிகரிக்க சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை, அரசியலமைப்பின் 9வது அட்டவணையில் சேர்ப்பதற்கு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.
7. பஞ்சாயத்து, நகராட்சி அமைப்புகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீதம் இட ஒதுக்கீடு, 30 ஆக உயர்த்தப்படும்.
8. பட்டியலின பிரிவினருக்கு 16 சதவீதம் என்பது 20 சதவீதம் ஆகவும், பழங்குடியினருக்கு இடஒதுக்கீட்டில் விகிதாச்சார அதிகரிப்பும் உறுதி செய்யப்படும்.
9. வக்ப் திருத்த மசோதா நிறுத்தி வைக்கப்படும். அனைத்து இஸ்லாமிய மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படும்.
10. புத்தகயாவில் உள்ள புத்தகோவில்களின் நிர்வாகம், பவுத்த மக்களிடம் ஒப்படைக்கப்படும்.
11.மாய்-பெஹின் மான் யோஜனா' (Mai-Behin Maan Yojana) திட்டத்தின் கீழ், பெண்களுக்கு டிசம்பர் மாதம் முதல் மாதந்தோறும் ரூ.2,500 நிதியுதவி வழங்கப்படும்.
12. சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், கணவனை இழந்த பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு மாதந்தோறும் ரூ.15,000 ஓய்வூதியம் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கப்படும்.
Tags: இந்திய செய்திகள்
