Breaking News

1ம் தேதி உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

1ம் தேதி உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு



இராஜராஜ சோழனின் 1040-ம் ஆண்டு சதய விழாவையொட்டி வருகிற 1-ம் தேதி தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்  அறிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி சதய நட்சத்திரத்தில் மாமன்னர் ராஜராஜசோழன் பிறந்த மற்றும் முடிசூட்டிய நாள் சதயவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

அதன்படி நடப்பு ஆண்டு மாமன்னர் ராஜராஜசோழனின் 1040-வது சதயவிழா வருகிற 31-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. 

இந்த நிலையில், இராஜராஜ சோழனின் 1040-ம் ஆண்டு சதய விழாவையொட்டி வருகிற 1-ம் தேதி தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback