பாஜக மூத்த தலைவரும், நாகலாந்து மாநில ஆளுநருமான இல.கணேசன் திடீர் மரணம் Nagaland Governor La Ganesan passes away
பாஜக மூத்த தலைவரும், நாகலாந்து மாநில ஆளுநருமான இல.கணேசன் திடீர் மரணம்
பாஜக மூத்த தலைவரும், நாகலாந்து மாநில ஆளுநருமான இல.கணேசன் (80) சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்
இந்தியாவின் தமிழகத்தில் உள்ள தஞ்சாவூரைச் சேர்ந்தவர் இல. கணேசன் .பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியும் மற்றும் கட்சியின் தேசியக் குழுவின் முன்னாள் உறுப்பினரும் ஆவார்
மேலும் இவர் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில செயலராக நியமிக்கப்படுவதற்கு முன்பு ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் பிரச்சாரகராக இருந்தவர்.
அதன்பின் கட்சியின் தேசிய செயலராகவும், கட்சியின் தேசிய துணைத்தலைவராகவும் பணியாற்றியவர்.அடுத்து பாஜக கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2009 மக்களவைத் தேர்தலிலும், 2014 மக்களவைத் தேர்தலிலும் தென் சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.
பின்னர் மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு, 6 அக்டோபர் 2016 அன்று பதவி ஏற்றுக் கொண்டார்.
ஆகஸ்டு 22, 2021 அன்று மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட அவர் பிப்ரவரி 20, 2023 அன்று நாகாலாந்து மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
Tags: அரசியல் செய்திகள்