தமிழக வெற்றிக்கழக கொடிக்கு தடையில்லை சென்னை ஐகோர்ட் தீர்ப்பு
அட்மின் மீடியா
0
விஜய்யின் தவெக கொடிக்குத் தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு
தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடிக்கு எதிராகத் தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபையின் தலைவர் பச்சையப்பன் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில் தங்கள் சபையின் சின்னம் சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறம் எனப் பதிவுத்துறையில் பதிவு செய்யபட்டுள்ளது எனவே அக்கொடிகலரை பயன்படுத்தக் கூடாது என அதில் குறிபிடப்பட்டு இருந்தது
அந்த வழக்கில் அக்கட்சி தலைவர் விஜய்க்கு ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியது. மனுகுறித்து தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அக்கட்சித் தலைவர் விஜய் பதில் தர உத்தரவிட்டது .
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இரு கொடிகளையும் ஒப்பிடுகையில் TVK கொடி முற்றிலும் வேறுபாடானது; TVK கொடியில் மஞ்சள் நிறத்தில் யானை, வாகை மலர், 28 நட்சத்திரங்கள் உள்ளதால் மக்களிடம் எந்தக் குழப்பமும் இல்லையெனத் தெரிவித்துள்ளது.
Tags: அரசியல் செய்திகள்
