Breaking News

திபாவளி முதல் ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் - பாரத பிரதமர் மோடி அறிவிப்பு

அட்மின் மீடியா
0

கடந்த 2017 ஆம் ஆண்டில் அமல்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி)-ஐ குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


 

பிரதமர் நரேந்திர மோடி 12-வது முறையாகத் தேசியக் கொடியேற்றி வைத்து ஆற்றிய தமது சுதந்திர தின உரையில், தீபாவளிப் பரிசாக ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் செய்யப்படும் என அறிவித்திருந்தார். 

கடந்த 2017 ஆம் ஆண்டில் அமல்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி)-ஐ குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் உள்ள 12 சதவீதம் மற்றும் 28 சதவீதம் SLAB-களை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

அப்படியெனில் இனி 5%, 18% ஜிஎஸ்டி மட்டுமே இருக்கும். அதாவது தற்போது அடுக்குகளாக உள்ள ஜிஎஸ்டி வரிவிதிப்பை 2 அடுக்குகளாக மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

திட்டம் நடைமுறைக்கு வரும்பட்சத்தில் அதிகபட்ச ஜிஎஸ்டி வரி விதிப்பு 18% ஆக இருக்கும். மக்களுக்கான அதத்தியாவசியப் பொருட்களைக் குறைந்த வரிவரம்பில் வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரிவிதிப்பு மாற்றம்குறித்து ஜிஎஸ்டி ஆட்சி மன்றக்குழு கூடி ஆலோசித்து இறுதி முடிவெடுக்கும்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback