Breaking News

நகைக்கடை உரிமையாளர் மீது ஆசிட் வீசி கொள்ளை முயற்சி சேலத்தில் அதிர்ச்சி சம்பவ சிசிடிவி வீடியோ

அட்மின் மீடியா
0

நகைக்கடை உரிமையாளர் மீது ஆசிட் வீசி கொள்ளை முயற்சி சேலத்தில் அதிர்ச்சி சம்பவ சிசிடிவி வீடியோ


சேலம் மாவட்டம், ஆத்தூர் கடைவீதியில் நகைக்கடையில் கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி இரவு வாடிக்கையாளர்கள் போல நடித்து, நகைகளைப் பார்ப்பது போல் பேசிக்கொண்டிருந்த இருவரில் திடீரென ஒருவன்  தான் மறைத்து வைத்திருந்த ஆசிட் பாட்டிலை எடுத்து வைத்தீஸ்வரன், அவரது மனைவி செல்வ லட்சுமி மற்றும் கடையில் பணிபுரியும் ஊழியர் வசந்தி ஆகியோர் மீது வீசி 80 சவரன் நகைகளை எடுக்க முயற்சித்துள்ளனர். 

உடனே வைத்தீஸ்வரன் சுதாரித்துக்கொண்டு, கொள்ளையர்களுடன் போராடி, நகை திருட்டை தடுத்ததால் கொள்ளையன் துப்பாக்கியைக் காட்டி வைத்தீஸ்வரனுக்கு மிரட்டல் விடுத்துள்ளான் 

அப்போது வைத்தீஸ்வரன் துணிச்சலுடன் கொள்ளையனை மடக்கி பிடிக்க மற்றொரு கொள்ளையன் நகைகளுடன் கடைவீதி வழியாக ஓடித் தப்பிச் செல்ல முயன்ற போது பொதுமக்கள், அவனைத் துரத்திச் சென்று ஒரு மடக்கிப் பிடித்தனர். இருவரும் ஆத்தூர் நகர போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இச்சம்பவத்தில் காயமடைந்த வைத்தீஸ்வரன் மற்றும் அவரது மனைவி செல்வ லட்சுமி ஆகியோர் உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் ஆத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/Rafifaya/status/1953827888790478876

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback