ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட ஆர்டிஓ மற்றும் அவரது மனைவி பள்ளி ஆசிரியர் முழு விவரம்
ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட ஆர்டிஓ மற்றும் அவரது மனைவி பள்ளி ஆசிரியர் முழு விவரம்
நாமக்கல் மோகனூர் சாலை கலைவாணி நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (55). இவர் திருச்சியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு பிரமிளா (51) என்ற மனைவியும், சன்யுக்தா (25) என்ற மகளும், ஆதித்யா (21) என்ற மகனும் உள்ளனர். மனைவி பிரமிளா மோகனூர் அருகே ஆண்டாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில் இருவரும் அதிகாலை ரயில் முன் பாய்ந்தனர். இதில், இருவரும் உடல் சிதறி உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை்க்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் மகன், மகள் படிப்புக்காக வாங்கிய கடன் சுமை காரணமாக சுப்பிரமணி, மனைவி பிரமிளாவுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
ஆர்டிஓ மற்றும் ஆசிரியை தம்பதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் | ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட ஆர்டிஓ, மனைவிநாமக்கல்: திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலரும் அவரது மனைவியும் நாமக்கல் அருகே ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.நாமக்கல் மோகனூர் சாலை கலைவாணி நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (55). இவர் திருச்சியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு பிரமிளா (51) என்ற மனைவியும், சன்யுக்தா (25) என்ற மகளும், ஆதித்யா (21) என்ற மகனும் உள்ளனர். மனைவி பிரமிளா மோகனூர் அருகே ஆண்டாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில் இன்று அதிகாலை நாமக்கல் அருகே வகுரம்பட்டி என்ற இடத்தில் நாமக்கல்-கரூர் ரயில்வே தண்டவாளத்தில் சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி பிரமிளா ஆகியோர் உடல் சிதறி உயிரிழந்து கிடந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேலம் ரயில்வே போலீசார் இரு பிரேதங்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.ADVERTISEMENTHinduTamil26thJuneHinduTamil26thJuneஇருவரது பிரேதமும் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வட்டாரப் போக்குவரத்து அலுவலரும் அவரது மனைவியும் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாமக்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Tags: தமிழக செய்திகள்