Breaking News

சென்னை ராமாபுரம் அருகே மெட்ரோ ரயில் கட்டுமானம் இடிந்து கீழே விழுந்து விபத்து பைக்கில் சென்ற நபர் உயிரிழப்பு

அட்மின் மீடியா
0
சென்னை ராமாபுரம் அருகே மெட்ரோ ரயில் கட்டுமானம் இடிந்து கீழே விழுந்து விபத்து பைக்கில் சென்ற நபர் உயிரிழப்பு


சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில் 116.1 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பைபாஸ் வரையிலான வழித்தடம் முக்கியமானதாகும். மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ கட்டுமானம் இடிந்து விபத்துக்குள்ளானது.

நேற்று இரவு ஏராளமான தொழிலாளர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாரத விதமாக மேம்பால கட்டுமானம் இடிந்து விழுந்தது. இரண்டு ராட்சத தூண்களும் இடிந்து விழுந்தன. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காவல்துறையினர் பொதுமக்கள் வராதபடி தடுப்புகளை அமைத்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மெட்ரோ ரயில் கட்டுமானம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback