Breaking News

ஹவாய் தீவில் 1000 அடி உயரத்திற்க்கு வெடித்து சிதறிய கிலாவியா எரிமலை வீடியோ Volcán Kilauea de Hawaii

அட்மின் மீடியா
0

அமெரிக்காவில் கிலாவியா எரிமலையில் வெடித்துள்ள நிலையில், சுமார் 1,000 அடி உயரத்திற்கு கிலாவியா எரிமலையில் இருந்து தீக்குழம்பு வெளியேறுகிறது. 

அமெரிக்காவுக்கு சொந்தமான ஹவாய் தீவு, பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது. அமெரிக்க நிலப்பரப்பில் இருந்து தென்மேற்கே 2,000 மைல்களுக்கு அப்பால் அமைந்துள்ள இந்த தீவு, எரிமலைகளுக்கு புகழ் பெற்றது. 

இந்த நிலையில், கிலாவியா எரிமலை தற்போது மீண்டும் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறத் தொடங்கியுள்ளது.

இந்த வெடிப்பால் எரிமலையில் இருந்து சுமார் 1,000 அடி உயரத்துக்கு தீக்குழம்பு வெளியேறி வருகிறது. அதில் இருந்து வெளியேறும் சாம்பல், அருகில் உள்ள ஹலேமா தேசிய பூங்கா மீது பரவியுள்ளது. 

இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த தேசிய பூங்கா மூடப்பட்டது. மேலும் எரிமலையைச் சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

அமெரிக்காவின் ஹவாய் தீவில் அமைந்துள்ள கிலாவியா எரிமலை வெடித்து உள்ளது. கடந்த 6 மாதங்களில் மட்டும் 25வது முறையாக வெடித்துள்ளது.

1983ம் ஆண்டு முதல் எரிமலைக்குழம்பு தொடர்ந்து வெளியேறி வருகிறது. இந்த எரிமலை 4 ஆயிரம் அடி உயரம் கொண்டது. 

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/deZabedrosky/status/1933000673337225235

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback