பாலிடெக்னிக் கல்லூரியில் கலந்தாய்வு இல்லாமல் நேரடி சேர்க்கை நடத்த உத்தரவு
பாலிடெக்னிக் படிப்புகளுக்கு இதுவரை வந்த விண்ணப்பங்களை வைத்து Spot admission செய்ய அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் கலந்தாய்வு அல்லாமல், கல்லூரி அளவில் தரவரிசை தயார் செய்து நேரடி சேர்க்கை நடத்த தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் உத்தரவு
இது குறித்து வெளியான அறிவிப்பில்:-
2025-26-ம் கல்வியாண்டில் அரசு பலவகை தொழில் நுட்பக் கல்லூரிகளின் முதலாமாண்டு. நேரடி இரண்டாமாண்டு மற்றும் பகுதி நேர பட்டயப்படிப்பிற்கான விண்ணப்பப்பதிவு www.tnpoly.in என்ற இணையதளத்தின் வாயிலாக பெறப்பட்டு வருகின்றது.
இணையதளத்தின் வாயிலாக இதுவரை பதிவு செய்த மாணாக்கர்களை தொடர்பு கொண்டு, அவர்களுக்கு சேர்க்கை ஒதுக்கீடு ஆணை வழங்குவதற்கும் சான்றிதழ்கள், மற்றும் கட்டணத்தை பெற்றுக் கொள்வதற்கும் அனைத்து அரசு தொழில் நுட்பக் கல்லூரி முதல்வர்களுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது என்ற விவரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மேலும் விண்ணப்பப்பதிவு செய்யும் அனைத்து மாணவர்களுக்கும் உடனுக்குடன் சேர்க்கை ஒதுக்கீடு ஆணை வழங்கும்படியும் அனைத்து அரசு தொழில் நுட்பக் கல்லூரி முதல்வர்களுக்கும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
Tags: கல்வி செய்திகள்