கர்நாடகாவில் பேருந்தை பாதி வழியில் நிறுத்தி விட்டு தொழுகை செய்த அரசுப் பேருந்து ஓட்டுநர் வீடியோ
அட்மின் மீடியா
0
கர்நாடகாவில் ஹுப்ளி-ஹாவேரி சாலையில், ஜவேரி அருகே பேருந்தை பாதி வழியில் நிறுத்தி விட்டு தொழுகை செய்த அரசுப் பேருந்து ஓட்டுநர் , வீடியோ வைரல் ஆன நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகாவில் உள்ள ஹுப்ளி-ஹாவேரி சாலையில், ஜவேரி அருகே அரசுப் பேருந்தை ஓட்டுநர் ஏ.கே.முல்லா பாதி வழியில் நிறுத்தினார். பின்பு பேருந்தின் இருக்கைகளில் தொழுகை நடத்தினார் , பயணிகள் அவர் வாகனத்தை இயக்குவதற்காகக் காத்திருக்கிறார்கள். இந்த காணொளி பேருந்தின் உள்ளே அமர்ந்திருக்கும் பயணிகளில் ஒருவரால் எடுக்கப்பட்டது போல் தெரிகிறது.
குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் இந்தச் சம்பவம் ஏப்.29ம் தேதி நடந்ததாக கூறப்படுகிறது. ஹங்கல் பேருந்து டிப்போவைச் சேர்ந்த நியாஸ் முல்லா என்ற ஓட்டுநர், ஹங்கலில் இருந்து விஷால்காட்க்கு பேருந்தை ஓட்டிச் சென்றுபோது பயணத்தின் இடையில் பேருந்தை நிறுத்தி தனது இருக்கையில் தொழுகை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இந்நிலையில் ஒட்டுநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1917971230264799273
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ