கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச லேப்டாப், எந்தெந்த பாடப் பிரிவு மாணவர்களுக்கு கிடைக்கும் முழு விவரம்
கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச லேப்டாப், எந்தெந்த பாடப் பிரிவு மாணவர்களுக்கு கிடைக்கும் முழு விவரம்
கல்லூரி மாணவர்களுக்கு வழங்குவதற்கு 20 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்ய தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது
கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி அல்லது டேப் வழங்கப்படும் என்றும் இதற்காக முதற்கட்டமாக ரூ. 2,000 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டது.
ஒரு மடிக்கணினியின் விலை ரூ. 20,000 என்ற அளவில் தரமான மடிக்கணினி வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
இந்நிலையில் அரசு கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும்பொருட்டு அரசு டெண்டர் கோரியுள்ளது.
இந்த ஆண்டு 20 லட்சம் மடிக்கணினிகள் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசின் எல்காட் நிறுவனம் சர்வதேச அளவில் டெண்டர் கோரியுள்ளது.8 ஜிபி ரேம், 256 ஜிபி சேமிப்புத் திறன், 14 அல்லது 15.6 திரை , ப்ளூடூத் உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டிருக்கும் எனக் கூறப்படுகிறது.
மேலும் தமிழக அரசின் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படவுள்ள நிலையில், எந்தெந்த பாடப்பிரிவு மாணவர்களுக்கு வழங்கப்படும் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது
இதன்படி, கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், வேளாண்மை பிரிவு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட உள்ளது. இத்துடன் ஓராண்டு உத்தரவாதச் சான்றும் 3 ஆண்டுகளுக்கு சேவை சார்ந்த ஆதரவும் அளிக்கப்பட உள்ளது
Tags: தமிழக செய்திகள்