Breaking News

சென்னையில் பெண்களுக்கான அரசு வேலை உடனே விண்ணப்பியுங்கள் முழு விவரம் இதோ

அட்மின் மீடியா
0

சென்னையில் பெண்களுக்கான அரசு வேலை உடனே விண்ணப்பியுங்கள் முழு விவரம் இதோ



தமிழ்நாட்டில் சென்னையில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை – பெண்கள் உதவி மையத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியாளர்கள் பதவிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வயது வரம்பு:-

35க்குள் இருக்க வேண்டும். 

சென்னையில் வசித்து வரும் பெண்கள் மட்டும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி:-

பெண்கள் உதவி மையத்தில் உள்ள வழக்கு பணியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள் சமூகப் பணியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

உளவியல் ஆலோசகர்(Counselling Psychology) அல்லது மேலாண்மை வளர்ச்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சார்ந்த திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில் ஒரு வருட முன் அனுபவம் உடையவராகவும் உளவியல் ஆலோசனையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப்பணிகளிலோ குறைந்தபட்சம் 1 வருட அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.

கூடுதல் தகுதியாக விண்ணப்பதார்கள் வாகனம் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

தபால் முகவரி:-

மாவட்ட சமூகநல அலுவலகம்,

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,

8வது தளம், சிங்காரவேலர் மாளிகை,

இராஜாஜி சாலை,சென்னை – 01.

இமெயில் முகவரி : oscnorthchennai@gmail.com

விண்ணப்பிக்க கடைசி நாள்: 

05.05.2025 மாலை 5 மணி வரை

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்வும்;-

https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2025/04/2025042683.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback