3 ஆண்டு வழக்கறிஞர் பணி அனுபவம் இருந்தால் தான் நீதிபதி பணியில் சேர முடியும் - உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.
3 ஆண்டு வழக்கறிஞர் பணி அனுபவம் இருந்தால் தான் நீதிபதி பணியில் சேர முடியும் - உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.
நீதிபதியாக பணியாற்ற, குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றி இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் ஏ.ஜி. மாசிஹ் மற்றும் கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில்,
நீதித்துறையில் பணியாற்ற குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றிருக்க வேண்டும்.
3 ஆண்டுகள் பயிற்சி பெற்றிருப்பதை 10 ஆண்டுகாலம் வழக்கறிஞராக இருப்பவர் சான்றழித்து அங்கீகரிக்கப்பட வேண்டும்.
இந்த தீர்ப்பு ஏற்கனவே தொடங்கி தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் நீதித்துறை பணியமர்த்தலுக்கு பொருந்தாது. அடுத்த முறை தொடங்கப்படும்போது இந்த தீர்ப்பு பொருந்தும் என உத்தரவு
வழக்கறிஞர் பணி அனுபவம் இல்லாத புதிய சட்ட பட்டதாரிகளை நீதித்துறை பணியில் நியமிக்கும் போது பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. எனவே நீதித்துறை பணிக்கு விண்ணப்பிக்கும் ஒருவர் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றி இருக்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட் உத்தவிட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்