கனமழையால் சுவர் இடிந்து விழுந்து சிறுவன் உட்பட 3 பேர் பலி மதுரையில் சோகம்
மதுரை ,மே -20 :-
ம்துரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே வலையங்குளம் கிராமத்தில் நேற்றிரவு 7 மணியளவில் மழை காரணமாக அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டிற்கு வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது மழையால் வீட்டின் ஒரு பக்க சுவர் சுவர் இடிந்து விழுந்தது. சுவரின் இடிபாடுகள், இந்த 3 பேரின் மீது விழுந்ததில் அவர்கள் 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
இதில் வெங்கட்டி சிறிது நேரத்திலேயே உயிரிழந்து விட்டார். மற்ற 2 பேரும் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர்கள் இருவரும் இன்று உயிரிழந்தனர். இதனால், சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் சிக்கி ஒரே தெருவில் 3 பேர் பலியாகி உள்ளனர்.இச்சம்பவம் குறித்து பெருங்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags: தமிழக செய்திகள்