ஹலால் சான்றிதழை அமெரிக்க அரசாங்கம் ரத்து செய்தது என பரவும் செய்தி உண்மை என்ன US government revokes halal certification
அட்மின் மீடியா
0
ஹலால் சான்றிதழை அமெரிக்க அரசாங்கம் ரத்து செய்தது என பரவும் செய்தி உண்மை என்ன US government revokes halal certification
பரவும் செய்தி:-
ஹலால் சான்றிதழ்.
இஸ்லாமிய சட்டத்தின்படி படுகொலை என்று பொருள்படும் ஹலால் சான்றிதழ் என்று அழைக்கப்படுவதை அமெரிக்க அரசாங்கம் ரத்து செய்துள்ளது.
அமெரிக்க அரசாங்கமே ஹலால் சான்றிதழை ரத்து செய்ததன் மூலம், மெக்டொனால்ட்ஸ், கென்டக்கி ஃபிரைடு சிக்கன், டோமினோஸ், பிஸ்ஸா ஹட் மற்றும் ஸ்டார்பக்ஸ் உணவகங்கள் இப்போது ஹலால் அல்லாதவை.
செய்தி விவரங்கள்
மெக்டொனால்ட்ஸ், கென்டக்கி ஃபிரைடு சிக்கன், டோமினோஸ், பீட்சா ஹட் மற்றும் ஸ்டார்பக்ஸ் தயாரிப்புகளுக்கான ஹலால் சான்றிதழை அமெரிக்க அரசாங்கம் ரத்து செய்துள்ளது/திரும்பப் பெற்றுள்ளது.
அதன்படி:-
இஸ்லாமிய நீதித்துறை கவுன்சில் (MJC) மற்றும் IQSA ஆகியவை _McDonald, KFC, Dominos, Pizza Hut மற்றும் Starbuck_ ஆகியவற்றின் சான்றிதழை ரத்து செய்துள்ளன
அமெரிக்காவின் புளோரிடாவில் சமையலறை ஊழியர்களால் நடத்தப்பட்ட ஆய்வின்படி, மெக்டொனால்ட்ஸ் பொருட்களில் மெக்டொனால்ட்ஸ், கென்டக்கி ஃபிரைடு சிக்கன், டோமினோஸ் மற்றும் ஸ்டார்பக்ஸ் மயோனைஸில் பயன்படுத்தப்படும் "LM10" எனப்படும் பன்றி இறைச்சி மூலப்பொருள் இருப்பதற்கான வலுவான நேர்மறையான ஆதாரங்கள் காட்டப்பட்டுள்ளன.
*மெக்டொனால்ட்ஸ் AfSel அதிகாரிகள் அனைத்து உறைந்த சாஸ் பொருட்களும் அமெரிக்க அரசாங்கத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். முஸ்லிம் வாடிக்கையாளர்கள் மெக்டொனால்ட்ஸ், KFC, டோமினோஸ், ஸ்டார்பக்ஸ் தயாரிப்புகளை உட்கொள்வது அல்லது தொடுவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது/தடைசெய்யப்பட்டுள்ளது.*
இஸ்லாமிய நீதித்துறை கவுன்சில் (MJC) மற்றும் IQSA ஆகியவை மாநிலம் முழுவதும் சான்றிதழ்களை ரத்து செய்துள்ளன. இப்போது மற்றவர்களுக்கு உடனடியாகத் தெரிவிப்பது உங்கள் வேலை.
இந்தச் செய்தியை தயவுசெய்து புறக்கணிக்காதீர்கள்.. மறுபதிவு செய்யாமல் விட்டுவிடுவது பாவம்.. தெரியாத உங்கள் முஸ்லிம் சகோதரரை எச்சரிப்பது..ஹலால்/ஹராம் அல்லாத உணவுகளை உண்பவர்களை எச்சரிப்பது. மேலும் இந்த நோக்கத்திற்குப் பின்னால் கடவுள் இருக்கிறார்.. ஓ கடவுளே, நான் செய்தியை தெரிவித்துள்ளேன்..ஓ கடவுளே, சாட்சியாக இருங்கள் உங்கள் குடும்பங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
என சமூக வலைதளங்கலில் ஓர் செய்தியினை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்:-
உண்மை என்ன:-
அமெரிக்க அரசாங்கமோ அல்லது முஸ்லிம் நீதித்துறை கவுன்சிலோ பல்வேறு அமெரிக்க துரித உணவு சங்கிலிகளின் "ஹலால் சான்றிதழை ரத்து செய்யவில்லை
ஹலால் சான்றிதழ் என்றால் என்ன:-
ஹலால் சான்றிதழ் என்பது இஸ்லாமிய சட்டத்தின் கீழ் உண்ணக்கூடிய உணவு பொருட்கள் முஸ்லிம்களால் உண்ணக்கூடியவை, குடிக்கக்கூடியவை அல்லது பயன்படுத்தக்கூடியவை என அனுமதிக்கப்படுகின்றன என்பதற்கான அங்கீகாரமாகும்.
அதாவது ஹலால் சான்றிதழ் என்பது ஒரு உணவுப் பொருள் அல்லது தயாரிப்பு இஸ்லாமிய மத சட்டங்களுக்கு இணங்க தயாரித்திருப்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழாகும்.
இந்த சான்றிதழ் உணவுப் பொருள்கள், குறிப்பாக இறைச்சி, பால், மது போன்றவற்றை தயாரிக்கும்போது, இஸ்லாமிய உணவு விதிமுறைகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்கிறது.
ஹலால் சான்றிதழ் என்பது பல்வேறு நாடுகளில் வர்த்தக அனுமதியைப் பெறுவதற்கு அவசியமான ஒரு சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஆவணமாகும். இந்த சான்றிதழானது பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம் மற்றும் அம்சங்கள் இஸ்லாமிய கவுன்சிலால் நிறுவப்பட்ட சட்டத்தின்படி இருப்பதை உத்தரவாதம் செய்யும் ஒரு வழியாகும்
ஹலால் சான்றிதழ், முஸ்லிம்களின் நம்பிக்கையை பெற உதவுகிறது, ஏனெனில் அவர்கள் தங்கள் உணவு மற்றும் தயாரிப்புகள் இஸ்லாமிய மத சட்டங்களுக்கு இணங்க தயாரித்திருப்பதை உறுதி செய்கிறது ஏனெனில் முஸ்லிம் நுகர்வோர் ஹலால் சான்றிதழ் கொண்ட தயாரிப்புகளை எளிதாக நம்பி வாங்குவர்.
ஹலால் சான்றிதழ் யாரால் அளிக்கப்படுகின்றது.
பழமையான இஸ்லாமிய அமைப்பான ஹலால் அறக்கட்டளையின் ஹலால் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றது. ஷரியா சட்டத்தின்படி தங்கள் தயாரிப்புகள் ஹலால் தேவையை பூர்த்தி செய்துள்ளன என்ற உணவு உற்பத்தியாளர்களின் கூற்றை ஆதரிப்பதற்கான ஒரு அதிகாரப்பூர்வ மற்றும் நம்பகமான சான்றாகும்.
சான்றளிக்கப்பட்ட ஹலால் உணவுப் பொருட்கள் உள்நாட்டில் ஏற்றுக்கொள்ளப்படுவது மட்டுமல்லாமல், உலகளாவிய ஹலால் நுகர்வோருக்கும் சந்தைப்படுத்தப்படுகின்றன.
இது குறிப்பாக ஹலால் அல்லாத உணவுப் பொருட்களை விற்பனை செய்ய அனுமதிக்காத நாடுகளில் ஏற்றுமதி சந்தைகளுக்கு ஒரு வாய்ப்பைத் திறக்கிறது. மேலும், ஹலால் பொருட்கள் முஸ்லிம் நுகர்வோரால் மட்டுமல்ல,
ஹலால் சான்றிதழ் உயர் மட்ட சுகாதாரம், தூய்மை, பாதுகாப்பு, ஊட்டச்சத்து ஆகியவற்றைக் குறிக்கிறது மற்றும் இஸ்லாமிய உணவுச் சட்டத்தின் தேவைகளின் கீழ் கண்டிப்பாக தயாரிக்கப்படுகிறது.
பொதுவாக ஹலால் சான்றிதழ் உணவுகளை தான் வாங்கவேண்டும் என்றோ, அல்லது ஹலால் உணவுகளை தான் விற்க்கவேண்டும் என்றோ எந்த ஒரு நாட்டிலும் எந்த ஒரு அரசாங்கமும் சட்டம் இட முடியாது
ஹலால் சான்றிதழுக்கும் எந்த ஒரு நாட்டு அரசாங்கத்திற்க்கும் சம்மந்தமில்லை.
மேலும் அதேபோல் அமெரிக்காவில் உணவகங்கள் ஹலால் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஹலால் பொருட்களை வழங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை
அமெரிக்க அரசு இவ்வாறு ஹலால் சான்றிதழை ரத்து செய்வதாக எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.
மேலும், இந்த வதந்தி கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து பரப்பப்பட்டு வருவகின்றது.
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி