Breaking News

சாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் முழு விவரம்

அட்மின் மீடியா
0

சாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் முழு விவரம்

நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு சாதிவாரியாக நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது சாதிவாரி கணக்கெடுப்பு சேர்க்கப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார். 

இட ஒதுக்கீடு மற்றும் இதர நலத்திட்ட பணிகளை மிகச் சரியான விகிதத்தில் செயல்படுத்த சாதிவாரி கணக்கெடுப்பு உதவியாக அமையும் எனக் கூறப்படுகிறது. 

இதற்கு முன்பு கடந்த 2011ம் ஆண்டில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 2021ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறுவதாக இருந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback