Breaking News

போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத தொகை அதிகரிப்பு முழு விவரம் New Motor Vehicle Fines 2025

அட்மின் மீடியா
0

New Motor Vehicle Fines 2025 மார்ச் 1, 2025 முதல் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத தொகை மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. 

குடிபோதையில் வாகனம் ஓட்டும் குற்றவாளிகளுக்கு 10,000 ரூபாய் அபராதம் அல்லது ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். 

வாகனம் ஓட்டும் போது மொபைல் போன்களைப் பயன்படுத்தினால் ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும் இதன் முந்தைய அபராதம் ரூ. 500 ஆக இருந்தது. இ

ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கும், சீட் பெல்ட் அணியாமல் சென்றால் ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும். 

இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனத்தை இயக்கினால் ரூ. 2,000 அபராதம் விதிக்கப்படும். மீண்டும் மீண்டும் இதே குற்றங்கள் நடந்தால் அபராதம் ரூ.4,000 ஆக விதிக்கப்படும்

மாசு சான்றிதழை வைத்திருக்கவில்லை என்றால் ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படும், 

இரு சக்கர வாகனத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்றால், 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். 

பைக் ஓட்டுநர் சாகசங்கள் செய்தாலோ அல்லது ஆபத்தான முறையில் ஓட்டினாலோ ரூ.500க்கு பதிலாக ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் 

அவசரகால வாகனங்களுக்கு வழிவிடாமல் சென்றால் ரூபாய் 10,000 அபராதம் விதிக்கப்படும். 

சிக்னல் ஜம்பிங்கிற்கு இப்போது ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும்

அதிக பாரம் ஏற்றும் வாகனங்களுக்கு ரூ. 20000 அபராதம் விதிக்கப்படும். 

18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் வாகனம் ஓட்டினால் ரூ. 25000 அபராதம் விதிக்கப்படும். 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback