Breaking News

அரசு ஊழியர்களுக்கான திருத்தப்பட்ட நடத்தை விதிகள் வெளியீடு முழு விவரம் இதோ

அட்மின் மீடியா
0

அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது திருத்தப்பட்ட நடத்தை விதிகள் வெளியீடு

மாநில அரசு ஊழியர்களுக்காக 1973ல் உருவாக்கப்பட்ட நடத்தை விதிகளில் திருத்தம் செய்து, புதிய விதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 



  • அரசின் அனுமதியின்றி அரசு ஊழியர்கள், அவர்களின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள், 25,000 ரூபாய்க்கும் அதிகமான பரிசுகளை பெறக் கூடாது. திருமணம் உள்ளிட்ட மத சடங்குகளின்போது, 25,000 ரூபாய்க்கும் அதிகமான பரிசுகளைப் பெறலாம். இதை ஒரு மாதத்திற்குள் அரசுக்கு தெரிவிக்க வேண்டும்
  • அரசு ஊழியர், தனக்கான அரசு பணிகளைத் தவிர, எந்தவொரு அலுவல் சாரா கூட்டத்திற்கோ, மாநாட்டிற்கோ, தலைமை தாங்கவோ, பங்கேற்கவோ கூடாது. அதில் உரையாற்றவும் கூடாது

  • அரசு ஊழியர்கள், எந்தவொரு அரசியல் கட்சி, அமைப்பிலும், உறுப்பினராக இருக்கக் கூடாது. வேறு எந்த வகையிலும் தொடர்பு வைத்திருக்க கூடாது. எந்த அரசியல் கட்சிக்கோ, தேர்தலில் எந்த வேட்பாளருக்கோ ஆதரவாக இருக்கிறார் என்ற சந்தேகம் ஏற்படுவதற்கு இடமளிக்க கூடாது

  • ஒரு அரசு ஊழியரின் குடும்பத்தினர், அரசியல் கட்சி, அமைப்புகளில் இருந்தால், அதை அரசுக்கு தெரிவிக்க வேண்டும். தேர்தலில் ஓட்டு போடலாம்; ஆனால், யாருக்காகவும் பிரசாரம் செய்யவோ, வேறு வகைகளில் தலையிடவோ கூடாது

  • அரசு ஊழியர், வேலை நிறுத்தத்தில் ஈடுபடவோ அல்லது அதற்கான தூண்டுதல்களில் ஈடுபடவோ கூடாது. 
  • அனுமதியின்றி, அரசு அலுவலக வளாகத்திலோ, அதையொட்டியோ ஊர்வலம், கூட்டம் நடத்தக் கூடாது. அதில் உரையாற்றவும் கூடாது என புதிய விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback