பெண் வேடமிட்டு பாலியல் தொல்லை என பரவும் வீடியோ பிக்பாஸ் விக்ரமன் விளக்கம்
பெண் வேடமிட்டு பாலியல் தொல்லை என பரவும் வீடியோ பிக்பாஸ் விக்ரமன் விளக்கம்
அடுக்குமாடி குடியிருப்பில் பிக்பாஸ் பிரபலமும், விசிக பிரமுகருமான விக்ரமன் பெண் வேடமிட்டு, ஆண் ஊழியரை பாலியல் ரீதியாக தாக்க முற்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் இதனை முற்றிலுமாக மறுத்துள்ளார்.மேலும், எந்த அறமும் இன்றி சமூக ஊடகங்களில் அவதூறு பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விக்ரமன் எச்சரித்துள்ளார்.
சென்னை அய்யப்பன்தாங்கலை அடுத்த பிரபல நிறுவனத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் பிக்பாஸ் பிரபலமும், விசிகவை சேர்ந்தவருமான விக்ரமன் கடந்த ஆண்டு மே மாதம் வரை வசித்து வந்தார்.
இந்த நிலையில் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து சில வீடியோக்கள் வெளியாகியுள்ளது. அதில், அக்குடியிருப்பில் வசித்த பிக்பாஸ் பிரபலமும், விசிக பிரமுகருமான விக்ரமன் பெண் வேடமிட்டு, ஆண் ஊழியரை பாலியல் ரீதியாக தாக்க முற்பட்டதாகவும், அவரை அங்கு பணியில் இருக்கும் ஊழியர்கள் மடக்கி பிடித்ததாகவும் சில தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டன.
விக்ரமன் விளக்கம்:-
சினிமா படப்பிடிப்பு சம்மந்தமாக நடந்த ஒன்றை வைத்து அடிப்படை ஆதாரமின்றி அவதூறு பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.அறத்தின்படி செயல்பட்டு துரிதமாக நடவடிக்கை எடுத்த பாலிமர் தொலைக்காட்சி நிர்வாகத்திற்கு மனமார்ந்த நன்றி.
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்
