திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வீடியோ எடுத்த விவகாரம் டிடிஎஃப் வாசன் வங்கி கணக்கு முடக்கம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வீடியோ எடுத்த விவகாரம் டிடிஎஃப் வாசன் வங்கி கணக்கு முடக்கம்
கடந்த 2024-ஆம் ஆண்டு திருப்பதி மலைக்கு டி.டி.எஃப் வாசன் சென்றிருந்தார். அப்போது, தரிசன வரிசையில் நின்று கொண்டிருந்த அவர், அதனை வீடியோவாக எடுத்து பதிவிட்டார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக திருமலை போலீசார், டி.டி.எஃப் வாசன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், டி.டி.எஃப் வாசனின் வங்கிக் கணக்கை திருமலை போலீசார் முடக்கி வைத்திருப்பதாக அவரது வழக்கறிஞர் முத்து, செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், டி.டி.எஃப் வாசன் தரப்பில் இருந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனுதாக்கல் செய்ய இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tags: தமிழக செய்திகள்
