Breaking News

நெல்லையில் பரபரப்பு! அதிகாலை தொழுகை முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் வெட்டிக்கொலை! முழு விவரம்

அட்மின் மீடியா
0

நெல்லையில் பரபரப்பு! அதிகாலை தொழுகை முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் வெட்டிக்கொலை! முழு விவரம்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன்காட்சி மண்டபம் பகுதியில் வசித்துவந்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் பிஜில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அதிகாலையில் தொழுகை முடிந்து, வீடு திரும்பியபோது ஜாஹீர் உசேனை மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கிய 3 பேர் கும்பல் ஜாகீர் உசேனை சுற்றி வளைத்து சரமாரி வெட்டிக்கொலை செய்தது.

பின்னர் அங்கிருந்து அந்த கும்பல் தப்பிச்சென்றுவிட்டது.தகவல் அறிந்து வந்த போலீசார் ஜாஹீர் உசேனின் உடலை கைப்பற்றி  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலையாளிகள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கருணாநிதி முதல்வராக இருந்தபோது முதல்வர் தனிப்பிரிவு அதிகாரியாக ஜாஹிர் உசேன் பிஜில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் இவர் நெல்லை டவுன் முர்த்திம் ஜைக்கான் தைக்காவில் நிர்வாகியாக இருந்து வந்தார்.

இந்த கொலை சம்மந்தமாக கார்த்திக், மற்றும் அக்பர் பாஷா ஆகிய இரண்டு பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்கள்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback