மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்த போது மின்னல் தாக்கி போன் வெடித்து இளைஞர் பலி முழு விவரம்
மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்த போது மின்னல் தாக்கி போன் வெடித்து இளைஞர் பலி முழு விவரம்
கேரளாவின் ஆலப்புழா அருகே செல்போன் பேசும் போது மின்னல் தாக்கி, செல்போன் வெடித்துச் சிதறியதில் பலத்த காயமடைந்த ஸ்ரீனிவாசன் (28) என்ற நபர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது
கேரளாவின் குட்டநாடு, ஆலப்புழாவில் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி 28 வயது இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இறந்தவர் எடத்துவாவைச் சேர்ந்த அகில் பி. சீனிவாசன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது நண்பர் ஷரோன் லேசான காயங்களுக்கு உள்ளானார்.
இந்த சம்பவம் பிற்பகல் 3:30 மணியளவில் நடந்தது. போட்டியின் போது, அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது, அவர் பதிலளித்தபோது, மின்னல் தாக்கியதில் அவரது தொலைபேசி வெடித்தது.
இதில் அவரது காது, தலை மற்றும் மார்பில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டன.பின்னர் அவர் ஆலப்புழா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Tags: இந்திய செய்திகள்