Breaking News

நபிகள் நாயகம் வாழ்க்கையைப் பின்பற்றி, மனிதநேயத்தையும் சகோதரத்துவத்தையும் கடைப்பிடிக்கும் இஸ்லாமியர்களுக்கு நன்றி - தவெக தலைவர் விஜய்

அட்மின் மீடியா
0

நபிகள் நாயகம் வாழ்க்கையைப் பின்பற்றி, மனிதநேயத்தையும் சகோதரத்துவத்தையும் கடைப்பிடிக்கும் இஸ்லாமியர்களுக்கு நன்றி - தவெக தலைவர் விஜய்



சென்னையில் தவெக சார்பில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இப்தார் நோன்பு திறக்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு சரியாக 6.24 மணிக்கு நோன்பு திறந்தார். மேலும் நிகழ்ச்சிக்காக மட்டுமின்றி உண்மையிலேயே இன்றைக்கு விஜய் நோன்பு இருந்தார்.

மேலும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் குல்லா, வெள்ளை சட்டை, வெள்ளை லுங்கி அணிந்து வந்திருந்தார்.

இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட சுமார் 3000 பேர் பங்கேற்றனர். அவர்களுடன் அமர்ந்து நோன்பு கஞ்சி பருகி நோன்பு திறந்தார் விஜய்.  இதனையடுத்து, நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்குப் பின் தவெக சார்பில் மட்டன் பிரியாணி சிக்கன் 65 ஆகியவை பரிமாற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நோன்பு துறந்ததற்கு பிறகு, இஸ்லாமியர்களுடன் முன்வரிசையில் நின்று தொழுகையில் ஈடுபட்டார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback