நெல்லை ஜாகீர் உசேன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி துப்பாக்கிச்சூடு நடத்தி கைது
நெல்லையில் ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளர் ஜாகிர் உசேன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி தௌஃபிக் என்ற கிருஷ்ணமூர்த்தியை பிடிக்க முயற்சித்த போது துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்து நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன்காட்சி மண்டபம் பகுதியில் வசித்துவந்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் பிஜில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலையில் தொழுகை முடிந்து, வீடு திரும்பியபோது ஜாஹீர் உசேனை மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கிய 3 பேர் கும்பல் ஜாகீர் உசேனை சுற்றி வளைத்து சரமாரி வெட்டிக்கொலை செய்தது.
பின்னர் அங்கிருந்து அந்த கும்பல் தப்பிச்சென்றுவிட்டது.தகவல் அறிந்து வந்த போலீசார் ஜாஹீர் உசேனின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலையாளிகள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருணாநிதி முதல்வராக இருந்தபோது முதல்வர் தனிப்பிரிவு அதிகாரியாக ஜாஹிர் உசேன் பிஜில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் இவர் நெல்லை டவுன் முர்த்திம் ஜைக்கான் தைக்காவில் நிர்வாகியாக இருந்து வந்தார்.
இந்த கொலை சம்மந்தமாக கார்த்திக், மற்றும் அக்பர் பாஷா ஆகிய இரண்டு பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்கள்
சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி, துப்பாக்கிசூடு நடத்தி பிடிக்கப்பட்டுள்ளார்.
ரெட்டியார்பட்டி பகுதியில் பதுங்கியிருந்த முகமது தவுபிக் (எ) கிருஷ்ணமூர்த்தியை சுற்றி வளைத்துப் பிடிக்கும்போது, போலீசாரை அவர் அரிவாளால் வெட்டினார். அப்போது சுதாரித்துக்கொண்ட போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி முகமது தவுபிக்கை கைது செய்தனர். துப்பாக்கி சூட்டில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Tags: தமிழக செய்திகள்