வங்கியில் அடகு வைத்த நகைகளை மீட்பதில் ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறையால் பெரும் சிக்கல்
அட்மின் மீடியா
0
வங்கிகளில் வைக்கும் நகைக் கடன்களுக்கு கால அவகாசம் முடியும் தருவாயில் வட்டி மட்டும் செலுத்தி திருப்பி வைக்கும் நடைமுறையை மாற்றி முழுத் தொகையும் செலுத்திதான் நகைகளை மீண்டும் அடகு வைக்க வேண்டும் என்று புதிய விதிமுறையை ரிசர்வ் வங்கி நடைமுறைப்படுத்தி உள்ளது.
வங்கிகளில் அடகு வைத்துள்ள நகைகளை முழுப் பணமும் செலுத்தி திருப்பிவிட்டு, மறுநாள்தான் மீண்டும் அடகு வைக்க முடியும் என்ற ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறையால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்க்கு ஆளாகியுள்ளார்கள்
இதற்கு முன், ஒவ்வொரு ஆண்டும் வட்டி மட்டுமே செலுத்தி மறு அடகு வைக்க முடியும்.
Tags: தமிழக செய்திகள்