Breaking News

மகாராஷ்டிராவில் ஔரங்கசீப் கல்லறையை இடிக்க வலியுறுத்தி போராட்டம் - இரு பிரிவினரிடயே ஏற்ப்பட்ட கலவரம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

மகாராஷ்டிராவில் ஔரங்கசீப் கல்லறையை இடிக்க வலியுறுத்தி போராட்டம் - இரு பிரிவினரிடயே ஏற்ப்பட்ட கலவரம் முழு விவரம்

ஔரங்கசீப்பைப் புகழ்ந்து பேசியதற்காக மகாராஷ்டிரா சமாஜ்வாடி கட்சி எம்எல்ஏ அபு அசீம் ஆஸ்மி கூட்டத்தொடரில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். 

ஒளரங்கசீப் கல்லறையை அகற்ற தானும் விரும்புவதாகவும், அதில் சட்டச் சிக்கல் இருப்பதாகவும் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸும் தெரிவித்துள்ளார்.

ஔரங்கசீப் கல்லறை இடிப்பது தொடர்பாக மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, 

நாங்கள் மராத்தியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறோம். உண்மையான தேசபக்தன் ஔரங்கசீப்பை போற்றமாட்டான். யாரும் ஔரங்கசீப்பை ஆதரிக்கமாட்டார்கள். மகாராஷ்டிரத்தின் எதிரி. அவரின் மிச்சங்களை நாம் ஏன் வைத்திருக்க வேண்டும். என்று கூறியுள்ளார்.

மகாராஷ்டிரத்தின் ஔரங்கபாத் நகரில் உள்ள ஔரங்கசீப் கல்லறையில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க, அதைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் காவல்துறையினர் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்

இந்நிலையில் அவுரங்கசீப் கல்லறையை அகற்ற வலியுறுத்தியும், அகற்றாவிட்டால் கரசேவை மூலம் அகற்றப்படும் என்று கூறி மகாராஷ்டிரா பாஜக அரசிடம் மனு அளிக்க பஜ்ரங் தள், விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட வலது சாரி அமைப்புகள் முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகின. 

இந்த நிலையில், கல்லறையை அகற்றக்கோரி வலதுசாரி அமைப்புகள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து இரு குழுக்கள் இடையே மோதல் எற்பட்டது. 

நாக்பூரில் உள்ள மஹால் பகுதியில் இரு பிரிவினரும் கற்களை வீசி தாக்கி கொண்டனர். அங்கிருந்த வாகனங்களுக்கும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. அங்கு வந்த தீ அணைப்பு வீரர்கள் சிலரும் காயம் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்கொண்டு வன்முறை பரவாமல் தடுக்க கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. 

மேலும் 50 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தவறான தகவலால் இந்த வன்முறை ஏற்பட்டதாகவும் தற்போது வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள துணை ஆணையர் ஆர்சித் சந்தாக், யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார்

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback