Breaking News

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டை இணைக்க தேர்தல் ஆணையம் முடிவு முழு விவரம்

அட்மின் மீடியா
0

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டை இணைக்க தேர்தல் ஆணையம் முடிவு முழு விவரம்

ஆதாருடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



வாக்காளர் பட்டியலை ஆதாருடன் இணைக்க அனைத்து சாத்தியமான முயற்சிகளையும் எடுக்குமாறு மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு சமீபத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது

ஆதார் என்பது ஒவ்வொரு தனி நபரின் தனித்துவமான அடையாளத்தை நிறுவும் நோக்கத்திற்காக மத்திய அரசின் சார்பாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மூலம் தனிநபர்களுக்கு வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண் ஆகும். இது இந்தியாவில் எங்கும் அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்றாக கருதப்படுகிறது.

இந்த நிலையில், ஆதாருடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வாக்காளர் அடையாள அட்டையை, ஆதார் எண்ணுடன் இணைப்பது குறித்து UIDAI மற்றும் தேர்தல் ஆணையத்தின் தொழில்நுட்ப நிபுணர்கள் விரைவில் தொழில்நுட்ப ஆலோசனைகளை தொடங்க உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback