Breaking News

அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது தமிழக அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0

அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது என்று தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 



அரசு ஊழியர்கள் ஆசிரியர் சங்கங்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில எச்சரிக்கை விடுத்துள்ளது. பணிக்கு வராமல் வேலை நிறுத்தம் செய்யும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது. 

மருத்துவ விடுப்பை தவிர சாதாரண விடுப்போ, மற்ற விடுப்போ அரசு ஊழியர்கள் எடுக்கக் கூடாது. காலை 10:15 மணிக்குள் பணிக்கு வராதவர்களின் விவரங்களை சேகரித்து மனிதவள மேலாண்மைத் துறைக்கு அனுப்பவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback