9 மாதங்களுக்கு பிறகு பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் வைரல் வீடியோ
9 மாதங்களுக்கு பிறகு பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் வைரல் வீடியோ
கடந்த 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் SpaceXன் 'ட்ராகன்' விண்கலம் மூலம் 17 மணிநேர பயணத்திற்குப் பிறகு பத்திரமாக பூமிக்கு திரும்பினர்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்ட டிராகன் விண்கலம் புளோரிடா கடலில் இறங்கியது. இதன்முலம் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர், நிக் ஹேக், அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகிய 4 விண்வெளி வீரர்களும் பத்திரமாக பூமிக்கு திரும்பினர்.
இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.27 மணிக்கு டிராகன் விண்கலம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கடல் பகுதியில் பாராசூட் உதவியுடன் இறங்கி மிதந்தது. அப்போது படகுகளில் சென்று விண்கலத்தை கயிறு மூலம் கட்டி கப்பலுக்கு இழுத்தனர்.
பின்னர் சுனிதா வில்லியம்ஸ், வில்மோர், அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹேக், ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோர் வெளியே அழைத்து வரப்பட்டனர். 286 நாட்களுக்கு பிறகு சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் பூமிக்கு திரும்பியுள்ளனர்
Tags: வைரல் வீடியோ