Breaking News

பற்றி எரியும் காசா இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 85 பேர் பலி முழு விபரம்

அட்மின் மீடியா
0

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் தொடரும் நிலையில் தற்போது காசா பகுதியில் இஸ்ரேல் தரைவழித் தாக்குதலை ஆரம்பித்துள்ளது. 

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஜனவரி மாதம் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இருப்பினும், ஹமாஸ் பணய கைதிகளை விடுவிக்க மறுப்பதாகச் சொல்லி இஸ்ரேல்  திடீரென நேற்று வான்வழித் தாக்குதலை ஆரம்பித்தது. இந்த கொடூர தாக்குதலில் 400 பேரை வரை கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. .இஸ்ரேல் - காஸா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. முதல்கட்ட போர் நிறுத்தம் ஒப்பந்தம் கடந்த மார்ச் 1ஆம் தேதியோடு முடிவடைந்தது.



இந்தச் சூழலில் இஸ்ரேல் அடுத்த கட்டமாக தரைவழித் தாக்குதலை ஆரம்பித்துள்ளது. இன்று நடந்த தாக்குதல் மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை கான் யூனிஸ், ராஃபா உட்பட தெற்கு நகரங்கள், காஸா சிட்டி போன்ற வடக்கு நகரங்கள், டேய் அல்-பாலா போன்ற மத்திய நகரங்கள் என காஸா முனை முழுவதும் இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தியது. 

மேலும் காசா குடியிருப்பு பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதல்களில் பலியான பாலஸ்தீனியர்கள் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது என காசா சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால் நள்ளிரவில் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த ஆண்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டனர்.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback