Breaking News

பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா உள்ளிட்ட 5 பேர் கைது

அட்மின் மீடியா
0

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக மாணவர்களிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து - பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா உள்ளிட்ட 5 பேர் கைது

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக சென்னை காரப்பாக்கத்தில் பள்ளி மாணவர்களிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து பெற்ற விவகாரம் தொடர்பாக பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா, பாஜக கவுன்சிலர் உள்ளிட்ட 5 பேர் கைது 

சென்னை காரப்பாக்கத்தில் பாஜக சார்பாக நேற்று கையெழுத்து இயக்கம் நடந்தபோது மாணவர்களின் கைகளை பிடித்து இழுத்து கையெழுத்து பெற்றதாக குழந்தைகள் பாதுகாப்பு நலக் குழு புகார் அளித்தது. இதனை தொடர்ந்து கண்ணகி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து எஸ்.ஜி.சூர்யா, சுந்தரம், கோடீஸ்வரன், மோகன் மற்றும் அன்பரசு ஆகிய 5 பேரை கைது செய்தனர்

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback