Breaking News

ஈரோடு அருகே மனைவி கண்முன்னே பிரபல ரவுடி வெட்டி படுகொலை - 3 பேரை துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்த காவல்துறை

அட்மின் மீடியா
0

ஈரோடு நசியனூர் அருகே மனைவி கண்முன்னே பிரபல ரவுடி வெட்டி படுகொலை - 3 பேரை துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்த காவல்துறை

ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சேலம் ரவுடி ஜான் வெட்டிபடுகொலை செய்யப்பட்டார். தனது மனைவியுடன் மாமனார் வீட்டிற்கு சென்றபோது ரவுடி ஜானை காரில் துரத்திய 5 பேர் கொண்ட கும்பல் விபத்தை ஏற்படுத்தி, மனைவியின் கண்முன்னே ரவுடியை வெட்டிக்கொன்றது. 

இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. கொலை வழக்கில் ஜாமினில் வந்து கிச்சிப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டு வந்தார்.

சேலத்தில் இருந்து திருப்பூர் சென்ற ஜான் (எ) சாணக்கியன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில், மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

ரவுடி ஜான் கொலை சம்பவத்தில் தொடர்புடைய 3 பேர் பச்சபாளிமேடு பகுதியில் போலீசாரை தாக்கி தப்ப முயன்ற போது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் கார்த்திகேயன், சதீஷ், சரவணன், பூபாலன் ஆகிய 4 பேரும் சுட்டுப் பிடிக்கப்பட்டனர். மேலும் 4 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

மேலும் கொலை கும்பல் தாக்கியதில் காவல் ஆய்வாளர் ரவி, தலைமை காவலர் லோகநாதன் காயமடைந்துள்ளார்.பட்டப்பகலில் கொலை நடந்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback