Breaking News

அதிகாலை சஹர் நேரத்தில் காசா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 330 பேர் பலி முழு விவரம் Israel Gaza Airstrike

அட்மின் மீடியா
0

அதிகாலை சஹர் நேரத்தில் காசா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 330 பேர் பலி முழு விவரம்


இஸ்ரேல் மற்றும் காசாவில் செயல்படும் ஹமாஸ் இமைப்பு இடையே பல மாதங்களாக போர் நடைபெற்று வந்தது. அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து அமைதி பேச்சுவார்த்தை வெற்றி பெற்றது. இதனால் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பில் சண்டை ஏதும் இல்லாமல் இருந்தது.மேலும் பணயகைதிகள் விடுவிக்கப்பட்டு வந்தனா். 

தற்போது ஹமாஸ் பிடியில் 39 இஸ்ரேல் பணய கைதிகள் உள்ளனா். அவர்களை மீட்க இஸ்ரேல் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலையில் இஸ்ரேல், ஹமாஸ் மீது குண்டு மழை பொழிந்து வருகிறது. இந்த கொடூர தாக்குதலில் 340 பேரை வரை கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பயங்கர தாக்குதலுக்கு பின்னால் அமெரிக்கா ஆதரவு இருப்பதாக சொல்லப்படுகிறது.

காசா பகுதியில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில்  300க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களில் கொல்லப்பட்டதாகவும் அதில் பல பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் - 330 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கடந்த ஜனவரி 19ஆம் தேதி இஸ்ரேல் - காஸா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. முதல்கட்ட போர் நிறுத்தம் ஒப்பந்தம் கடந்த மார்ச் 1ஆம் தேதியோடு முடிவடைந்தது.

ரமலான் மாதம் என்பதால் முதல்கட்ட போர்நிறுத்தம் தொடர்ந்தது. இரண்டாம் கட்ட போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் 

இஸ்ரேல் இன்று(மார்ச் 18) அதிகாலை வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.பெரும்பாலானவர்கள் ரமலான் அதிகாலை சஹர் உணவை எடுத்துக் கொண்டிருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

ஹமாஸ் அமைப்பால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகத்தின் தகவலின் படி 330 பேர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மஹ்மூத் அபு வாஃபா கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம், "பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் தொடர்ந்து மறுத்து வருவதாகவும், போர்நிறுத்தத்தை நீட்டிக்கும் திட்டங்களை நிராகரிப்பதாகவும்" குற்றம்சாட்டியுள்ளது

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback