தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல்
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல்
ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரிகள் நியமனம் செய்வத தொடர்பான மசோதா மற்றும் கனிம வளம் நிறைந்த நிலப்பகுதிகளுக்கு வரி விதிப்பது உள்ளிட்ட இரண்டு மசோதாக்கள், ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டு நிலுவையில் இருந்த நிலையில், இன்று அந்த இரண்டு மசோதாக்களுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
கனிம வள மசோதா:-
கனிம வளம் நிறைந்த நிலப்பகுதிகளுக்கு நில வரி வசூலிப்பது தொடர்பான சட்ட மசோதா, நீர்வளத்துறை அமைச்சகத்தால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.
சிறப்பு அதிகாரிகள்
தமிழகத்தில் உள்ள 28 மாவட்டங்களுக்கு, ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் ஜனவரி 5ஆம் தேதியுடன் நிறைவு பெற்றதால், அந்த மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்வது தொடர்பான மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
இவ்விரு மசோதாக்களும் ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த நிலையில், இவ்விரு மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்திருக்கிறார் ஆளுநர் ஆர்.என். ரவி.
Tags: தமிழக செய்திகள்
