மகளிருக்கான பாதுகாப்பை உறுதிசெய்யத் தவறிய திமுகவை 2026-யில் மாத்துவோம் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வீடியோ
மகளிர் தின வாழ்த்துக்கள் கூறி மகளிருக்கான பாதுகாப்பை உறுதிசெய்யத் தவறிய திமுகவை 2026-யில் மாத்துவோம் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வீடியோ
மகளிர் தினத்தையொட்டி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள வீடியோவில்,
இன்றைக்கு மகளிர் தினம், தமிழ்நாடு முழுக்க உள்ள என்னுடைய அம்மா, அக்கா, தங்கச்சி, தோழி உள்ளிட்ட அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள். பாதுகாப்பாக இருந்தால்தானே சந்தோஷத்தை உணர முடியும். எந்த பாதுகாப்பும் இல்லாதபோது, பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் போது எந்த சந்தோஷமும் இருக்காதுதானே என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது.
என்ன செய்ய முடியும். நீங்க, நாம எல்லோரும் சேர்ந்துதான் திமுக அரசை தேர்ந்தெடுத்தோம். ஆனால் அவங்க இப்படி ஏமாத்துவாங்கனு இப்போதான் தெரியுது. எல்லாமே மாறக்கூடியதுதானே. மாற்றத்திற்குரியதுதானே. கவலைப்படாதீங்க.
2026இல் நீங்கள் எல்லோரும் சேர்ந்து, இல்லை நாம எல்லோரும் சேர்ந்து மகளிருக்கான பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய இவர்களை மாற்றுவோம். அதற்கு மகளிர் தினமான இன்று உறுதி ஏற்போம். எல்லா சூழ்நிலையிலும் உங்களின் மகனா, அண்ணனா. தம்பியா. நண்பனா உங்களோட நிற்பேன் என விஜய் தெரிவித்து உள்ளார்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1898225264762736684
Tags: அரசியல் செய்திகள்
