திருச்சி உள்ளிட்ட 11 விமான நிலையங்களை தனியாருக்கு குத்தகைக்கு விட உள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு!
திருச்சி உள்ளிட்ட 11 விமான நிலையங்களை தனியாருக்கு குத்தகைக்கு விட உள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு!
திருச்சி உள்ளிட்ட 11 விமான நிலையங்கள் தனியாருக்கு குத்தகைக்கு விட அடையாளம் காணப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் முரளீதர் மோஹோல் கூறி உள்ளார்.இதுதொடர்பாக ராஜ்யசபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு திருச்சி, அமிர்தசரஸ், வாரணாசி, புவனேஸ்வர், ராய்ப்பூர் விமான நிலையங்கள், 6 சிறிய விமான நிலையங்களின் இயக்கம், நிர்வாகம் மற்றும் மேம்பாட்டு பணிகளை அரசு மற்றும் தனியார் பங்கேற்பு திட்டத்தின் கீழ் தனியாரிடம் ஒப்படைக்க அடையாளம் காணப்பட்டு உள்ளன.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் இந்த 11 விமான நிலையங்களும் தனியார் வசம் விரைவில் ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது. தற்போது நாடு முழுவதும் 159 விமான நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: தமிழக செய்திகள்