Breaking News

10 ம் தேதி விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0
அரசு நிலை ஆணை எண்.313, பொது (பல்வகை) துறை நாள்.11.03.1997-இல் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளுக்கிணங்க புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகிய நான். புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை தாலுகா, புதுக்கோட்டை நகரைச் சேர்ந்த திருவப்பூர் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் திருவிழா 10.03.2025 அன்று நடைபெறுவதை முன்னிட்டு அன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும். கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை எனவும். அதற்கு பதிலாக 15.03.2025 சனிக்கிழமை அன்று பணிநாள் எனவும், வழக்கமாக சனிக்கிழமைகளை பணி நாளாகக் கொண்ட அலுவலகங்களுக்கு 16.03.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று பணிநாள் எனவும் அறிவிக்கிறேன்.


இந்த உள்ளூர் விடுமுறை 1881-ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் கீழான விடுமுறை நாள் அல்ல எனவும், இந்த உள்ளூர் விடுமுறை நாளன்று புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலகம் மற்றும் சார்நிலை கருவூலகங்களும் குறைந்தபட்ச அலுவலர்களுடன் அரசின் பாதுகாப்பினைக் கருதியும் அவசர அலுவல்கள் மேற்கொள்ளும் பொருட்டும் திறந்திருக்கும் எனவும் அறிவிக்கிறேன். மேலும், அரசு பொதுத்தேர்வுகள், அரசு அறிவித்த தேதிகளில் நடைபெறும் எனவும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback