இனி 1 வருடத்திற்க்கு 15 கேஸ் சிலிண்டர்கள் மட்டுமே முன்பதிவு ! இல்லத்தரசிகள் அதிர்ச்சி
இனி 1 வருடத்திற்க்கு 15 கேஸ் சிலிண்டர்கள் மட்டுமே! இல்லத்தரசிகள் அதிர்ச்சி
ஆண்டுக்கு 15 சமையல் சிலிண்டர் (14.20KG) மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.Gasசர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
இந்நிலையில் ஆண்டுக்கு 15 சமையல் சிலிண்டர் (14.20KG) மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
15 சிலிண்டர்கள் பெற்றவர்கள் அதற்குமேல் தேவைப்பட்டால் அதற்கான உரிய காரணத்தை கடிதமாக தந்தபின் சிலிண்டர்களை பெறலாம். முறைகேடாக சிலிண்டர்களை பயன்படுத்துவதை தடுக்க இந்த கட்டுப்பாடு என தகவல்.
மேலும் 15 சிலிண்டருக்கு மேல் பதிவு செய்பவர்களுக்கு தற்போது SMS அனுப்பப்படுகிறது. அதில் அன்புள்ள வாடிக்கையாளரே, இதை பதிவு செய்ய முடியாது; ஏனெனில், ஏற்கனவே ஆண்டு ஒதுக்கீடான, 213 கிலோவை பயன்படுத்தி விட்டீர்கள்' என, இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் எஸ்.எம்.எஸ்., தகவல் செல்கிறது.
வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு, பிளாக் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகார்களை தொடர்ந்து, எண்ணை நிறுவனங்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளன.
Tags: தமிழக செய்திகள்