சுய தொழில் வாய்ப்பு சென்னையில் 1 நாள் தேனீ வளர்ப்பு பயிற்சி முழு விபரம் 1 day Course on Honey Bee Farming chennai
சுய தொழில் வாய்ப்பு சென்னையில் 1 நாள் தேனீ வளர்ப்பு பயிற்சி முழு விபரம் 1 day Course on Honey Bee Farming chennai
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாக, சென்னை கிண்டியில் தகவல் மற்றும் பயிற்சி மையம் செயல்படுகிறது, அங்கு இயற்கை சோப்பு, பாரம்பரிய அரிசி உணவு தயாரிப்பு போன்ற பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.அதேபோல் தேனீ வளர்ப்பு பற்றிய பயிற்சியும் அளிக்கப்படுகின்றது
மருத்துவக் குணம் வாய்ந்த தேன் மனித வாழ்வுக்கு இன்றியமையாததாக இருந்து வருகிறது.
தேன் மற்றும் அதைச் சார்ந்த பொருட்களின் உபயோகம் அதிகரித்து வருவதால், தேனீ வளர்ப்பு ஒரு நல்ல தொழிலாக வளர்ச்சி அடைந்துள்ளது. தேனீ வளர்ப்பு ஒரு திறமையான துணை குடிசை வணிகமாகும். தேனீக்கள் சுகாதாரமான தேனை உற்பத்தி செய்கின்றன.
தேனீ வளர்ப்பில் தேன், மெழுகு ஆகியன முக்கிய பொருட்களாகும்.தேனீ வளர்ப்புக்கு குறைந்த நேரம், பணம் மற்றும் கட்டமைப்பு மூலதனமே தேவைப்படும்,
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையத் தலைவர் டாக்டர் அசோக் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை கிண்டியில் உள்ள பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தில் எதிர்வரும் 20ம் தேதி, சிறுதானிய உடனடி உணவு தயாரிப்பு பயிற்சி பற்றியும் அதேபோல் 21ம் தேதி தேனீ வளர்ப்பு குறித்தும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
சிறுதானிய உணவு வகைகள் பயிற்சியில் சிறுதானிய ஊட்டச்சத்து மாவு மிக்ஸ், சிறுதானிய இட்லி மிக்ஸ், பல தானிய லட்டு, ராகி அடை மிக்ஸ்,ராகி முறுக்கு மிக்ஸ், புட்டு மிக்ஸ் மற்றும் விற் பனை செய்யும் முறை கள் குறித்து கற்றுத் தரப்படும்.
அதேபோல் தேனீ வளர்ப்பு பயிற்சியில், தேனீ வளர்ப்பு, தேனீ வளர்ப்பு சாதனங்கள், பராமரிப்பு நுட்பங்கள், தேன் மற்றும் சார்ந்த பொருட்களை அறு வடை செய்தல் மற்றும் பதப்படுத்துதல் ஆகி யவை குறித்து விளக்கப்படும். மேலும், தேனீ சேகரிப்பு முறைகள் பற்றிய செயல் முறை விளக்கமும் வழங்கப்படும்.
இதில் பங்கேற்க விரும்புபவர்கள் 044-29530048 எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
.முகவரி:
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் தகவல் மற்றும் பயிற்சி மையம், முதல் தளம், சிப்பெட் எதிரில், திருவிக இண்டஸ்ரியல் எஸ்டேட், கிண்டி, சென்னை - 600 032.
Tags: தமிழக செய்திகள் தொழில் வாய்ப்பு முக்கிய செய்தி