Breaking News

ECR ல் பெண்களை காரில் துரத்திய சம்பவம்.. 6 பேர் கைது முழு விவரம்

அட்மின் மீடியா
0

ECR ல் பெண்களை காரில் துரத்திய சம்பவம்.. 6 பேர் கைது முழு விவரம்

கடந்த 26.01 2025 அன்று செல்வி சின்னி திலங்க் என்ற பெண் கானத்தூர் காவல் நிலையத்தில் ஆஜராகி 25.012025 அன்று நள்ளிரவு சுமார் 0200 AM அளவில் தான் (TN-13.S.5466) என்ற காரில் முட்டுகாடு பாலம் அருகே வந்த போது இரண்டு கார்களில் (TN.75-E-6004, TN-09-BR-9988)  வந்த 7 ,8 பேர்கள் திடீரென வழி மறித்துள்ளார்கள்:

அங்கு நிற்காமல் தனது வீட்டிற்கு சென்ற செல்வி சின்னி திலங்க என்பவரை இரண்டு கார்களில் வந்த நபர்கள் துரத்தி சென்று கானத்தூரில் உள்ள அவரது வீட்டருகே நிறுத்தி பிரச்சனை செய்து அவர்களது காரை செல்வி சின்னி நிலங்க என்பவர் கார் இடித்து விட்டு நிற்காமல் சென்றதாக கூறி உள்ளார்கள்.

மேலும் மேற்படி காரை இடித்து விட்டு நிற்காமல் சென்றதற்காக செல்வி. சின்னி திலங்க என்பவர் வந்த காரை துரத்தியதாகவும் அந்த பிரச்சனையை தீர்த்து வைப்பதற்காக வந்ததாக கூறியதை செல்வி. சின்னி திலங்க தரப்பு மறுத்துள்ளது.

மேற்படி புகாரின் பேரில் கானத்தூர் காவல்நிலைய மனு ரசீது எண் 22/2025 நாள் 26.012025 வழங்கப்பட்டு, விசாரணை மேற்கொண்டு தொடர்ந்து கானத்தூர் காவல் நிலைய குற்ற எண் 16/2025 u/s 120(2) 296(b), 324(2), 35(2) BNS r/w 4 of TNPHW Act வழக்குப்பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மேற்படி குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும் குற்றவாளிகள் பயனபடுத்திய கார்களை பறிமுதல் செய்யவும் அதன் தொடர்சியான ECR சாலையில் உள்ள CCTV காட்சிகளை ஆய்வு செய்து துரித புலன்விசாரணை செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே 2 பேர் கைதான நிலையில், விசாரணையில் இருந்த மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். காரில் கொடி பொருத்திய நபர் திமுக பிரமுகர் இல்லை என விளக்கம் அளித்துள்ள காவல்துறை, மோசடி வழக்குகளில் தொடர்புடைய சந்துரு காரில் தி.மு.க கொடியுடன் வலம் வந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback